இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமந்து வரும் வடுக்கள் இன்னமும் ஆறாதவையாகவே இருக்கின்றன.
பல வருடங்களாக அரசாங்கத்தினால் விசாரணை என்ற போர்வையில் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அழையும் அவலமும் நீண்டு கொண்டே தான் இருக்கின்றது.
இதுவரை காலமும் எந்தவொரு தகவலுமின்றி போனவர்களை மீட்காவிட்டாலும் அவர்களுக்கான நீதியை பெற்றுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சமூகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினையும் நாடியுள்ளது.
இருப்பினும், அதற்கான தீர்வு கிடைக்க பெறாதுள்ள நிலையில், இம்மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று நாடளாவிய ரீதியில் ஒரு மிகப்பெரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தனைக்கு மத்தியிலும் மனம் தளராது தமது உறவுகளுக்காக போராடும் தாய்மார்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கைகளுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி…