Home இலங்கை குற்றம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் மீது தாக்குதல் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் மீது தாக்குதல் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் மீது தாக்குதல்
மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக ஈபிடிபியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருக்கு எதிரான வழக்கு வவுனியா நீதிமன்றத்தால் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் மீது ஈபிடிபியின்
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையிலான குழுவினர்
கடந்த 2019 ஆம் ஆண்டு அவரை துரத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டு இருந்தனர்.

போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈபிடிபி செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு ஏற்படுத்தியதாக குறித்த தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வழக்கு 

காயமடைந்த ராஜ்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அது தொடாபான
வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

நேற்று (08.09) குறித்த வழக்கு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கு.திலீபன் இந்தியாவில் கடவுச் சீட்டு மோசடி வழக்கில் சிறையில் இருப்பதால்
வழக்கு தவணைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனால் வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 9
ஆம் திகதிக்கு நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version