Home இலங்கை குற்றம் வெலே சுதாவின் சிறைக்கூடங்களிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மீட்பு

வெலே சுதாவின் சிறைக்கூடங்களிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மீட்பு

0

பிரபல பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களான வெலே சுதா, கணேமுல்லை சஞ்சீவ ஆகியோரின் சிறைக்கூடங்களின் பின்புறமாக தொலைபேசி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் பி.டப்ளியூ சமந்த குமார மற்றும் பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கணேமுல்லை சஞ்சீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன ஆகியோர் தற்போது காலியில் உள்ள பூஸா அதியுயர் பாதுகாப்பு வலய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர்களின் சிறைக்சிறைக்கூடங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கணேமுல்லை சஞ்சீவ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையின் பின்புறமாக ஸ்மார்ட் ரக கைத்தொலைபேசி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணை

அதே ​போன்று வெலே சுதாவின் சிறையின் பின்புறமாக ஹேண்ட்ப்ரீ உபகரணம், தொலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கான கேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version