Home இலங்கை அரசியல் மோடி வருகையில் ஜேவிபியினர் மீதான குற்றச்சாட்டு: டில்வின் வழங்கிய பதில்

மோடி வருகையில் ஜேவிபியினர் மீதான குற்றச்சாட்டு: டில்வின் வழங்கிய பதில்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மிகப்பெரிய அண்டை நாட்டின் தலைவர் இந்த நாட்டிற்கு வந்திருப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மரியாதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஒரு அரச தலைவர் வரும்போது, ​​இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை எட்டுவது ஒரு நாடு செய்ய வேண்டிய ஒன்று என்றும் டில்வின் தெரிவித்துள்ளார்.

உயிர்த் தியாகம் 

அதன்படி, தனது கட்சி இந்தியாவிற்கு நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக சிறு குழுக்கள் கூறினாலும், வரலாற்றில் நாட்டின் துரோகங்களுக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது தனது கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டில்வின் சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version