நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் முஜுபுர் ரஹ்மானுக்கிடையில் வாக்குவாதம் உக்கிரமடைந்தது.
எவ்வாறாயினும், சபாநாயகர் சுமூகமாக பேசியதால் அங்கு குழப்பம் தவிர்க்கப்பட்டது.
பெரும் குழப்பம் தவிர்க்கப்பட்டு சபை அமைதியானது
இன்று நாடாளுமன்றத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடந்து கொண்டிருந்த போது முஜுபுர் ரஹ்மான் நீதியமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதளிக்க மறுத்த போதே குழப்பம் ஏற்பட்டது.
இதன்போது, முஜுபுர் ரஹ்மான் “2015 ஆம் ஆண்டு தோடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளின் எண்ணிக்கை” தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நீதிமன்றங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என்ற தொகுதிகளில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை. அத்தோடு அவ்வாறு வர்க்கப்படுத்தி வழக்கு கோவை வைக்கப்படுவதில்லை. ஆதலால் பதில் வழங்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட காலத்தை குறித்து மீள கேள்விளை தொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர், கேள்வி முடிந்து விட்டதால்.கேள்வி கேட்க முடியாது என கூறினார்.
உடனடியாக எழுந்த முஜுபுர் ரஹ்மான், எனக்கு கேள்வி கேட்பதற்கான உரிமை உண்டு. நீங்கள் எவ்வாறு கூறுவீர்கள் என்று குழப்பமடைந்தார்.
இதனையடுத்து, சபாநாயகர் சபையை அமைதிப்படுத்த முயற்சித்ததில் பெரும் குழப்பம் தவிர்க்கப்பட்டு சபை அமைதியானது.