Home இலங்கை சமூகம் குடிநீரே தேவை.. கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்கள் அவசர கோரிக்கை

குடிநீரே தேவை.. கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்கள் அவசர கோரிக்கை

0

கம்பளையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குடிநீர் கூட இன்றி சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள், தற்போது குடிநீர் இன்றி தவிக்கின்றோம் என அங்குள்ள நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

குழந்தைகளுக்கு மருந்து.. 

நீர் விநியோகம் மீட்டெடுக்கப்படாததாலும், வீடுகள் சேற்றால் நிரம்பி வழிவதாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மேலும், எங்களது மிக அவசரத் தேவை, சுத்தமான நீர் குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் என்பனவாகும். 

அதே நேரத்தில் சிறு குழந்தைகளுக்கும் மிக அத்தியாவசியமான சுகாதார தேவைகள் மற்றும் அடிப்படை மருந்துகளும் அவசரமாகத் தேவைப்படுவதாக அப்பகுதி மக்கள் கோருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version