Home இலங்கை சமூகம் இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்

0

தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகன் உயிரிழப்பு

உயிரிழந்த சஞ்சீவ கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் சாய்ந்துள்ளார்.

இறுதிக் கிரியைகள்

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் மகனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version