Home இலங்கை குற்றம் சிசுவை விற்க முயன்ற தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை

சிசுவை விற்க முயன்ற தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை

0

இரண்டு நாட்களேயான சிசுவினை விற்பனை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

75000 ரூபா பணத்திற்கு பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவினை விற்பனை செய்ய முயற்சித்த தாய்க்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.

இந்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அபராதத் தொகை 

இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மரசிங்க விதித்துள்ளார்.சிறைத் தண்டனைக்கு கூடுதலாக, குற்றவாளிக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாத லேசான சிறைத் தண்டனை வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version