வவுனியாவில் (Vavuniya) காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட முயன்ற போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாரிய சர்ச்சை வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (11) வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாங்கள் வைத்திருந்த தடியை நீட்டி நிறுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது, இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்ததையடுத்து காவல்துறையிரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/7Dfon3gBFyM
