Home இலங்கை அரசியல் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு

செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு

0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை

இதேவேளை இந்தியாவில் (India) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தமையால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் மன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதிமன்றத்தால் வழங்கப்படும் அடுத்த தவணைக்கான திகதியில் அவர் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இருப்பினும், அந்தக் காரணங்களை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version