Home இலங்கை சமூகம் மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட எம்.பி

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட எம்.பி

0

மன்னாரில் (Mannar) மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் (23) நேரடியாக சென்று
பார்வையிட்டதோடு, அவசர உதவியாக உலர் உணவு பொதியையும் வழங்கி வைத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23) இரவு வரை பெய்த கடும் மழை
காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள்
வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம்
கொடுத்துள்ள நிலையில் தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version