Home இந்தியா இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம் – 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம் – 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

0

நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு மும்பையின் மான்கூர்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிருஹன் மும்பை மாநகராட்சி (BMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கட்டிடம் இடிந்து விழுந்தது 

கனமழை காரணமாகவே இந்த நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும்
விபத்துக்குள்ளான கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய நபியா (2), நிஹால் (6), அலியா (7), முனாஃப் (7), முஸ்கான் (14) ஆகிய 5 குழந்தைகள், சோனி (32) என்ற பெண் ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்தனர்.

மற்றொரு நபர் ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த ஒருவர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source: https://ibctamil.com/article/mumbai-6-dead-including-children-building-collapse-1783317615

NO COMMENTS

Exit mobile version