Home இலங்கை குற்றம் யாழ். முற்றவெளி பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த ஒருவர் கைது!

யாழ். முற்றவெளி பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த ஒருவர் கைது!

0

யாழ்ப்பாணம்(Jaffna) முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இன்று(12) இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

தென்னிந்திய பிரபலங்கள்

இதில் தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ், ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may like this


Source: https://tamilwin.com/article/musical-show-in-muttraweli-jaffna-one-arrested-1720807408

NO COMMENTS

Exit mobile version