பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது 10வது வாரத்தில் இருக்கிறது. போட்டியாளர்கள் இடையே தினம்தோன்றும் சண்டை, வாக்குவாதம் என பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வெளியில் போட்டியாளர்களுக்கு ஆதரகவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
தீபக் பற்றி பேசிய நக்ஷத்திரா
பிக் பாஸ் 8ல் முக்கிய போட்டியாளராக இருக்கும் தீபக் பற்றி நடிகை நக்ஷத்திரா தற்போது பதிவிட்டு இருக்கிறார். அவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபக்கை ‘a true gentleman’ என குறிப்பிட்டு நக்ஷத்திரா போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது..
“நேர்மையான மனிதர், எல்லோரையும் சமமாக மதிப்பவர். அவர் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார், அதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எந்த சூழ்நிலையிலும் பாகுபாடு பார்ப்பவர் கிடையாது.”
“பொதுவாக நான் பிக் பாஸ் பற்றி கருத்து சொல்வது கிடையாது. ஆனால் தீபக் பற்றி தவறாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இதை சொல்கிறேன்” என நக்ஷத்திரா கூறி இருக்கிறார்.