Home இலங்கை சமூகம் நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு

0

யாழ். மாநகர சபையினருக்கு நல்லூர் (Nallur) ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டோலை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (27.05.2025) இடம்பெற்றுள்ளது.

யாழ் மாநகர சபை 

இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் அமையப்பெற்றிருந்தது.

நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யாழ். மாநகர சபை ஈடுபட்டு வருகின்றனர். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version