Home முக்கியச் செய்திகள் பட்டம் குறித்த அவதூறுகளுக்கு மேடையேறி பதிலளிப்பேன் : நாமல் பகிரங்கம்

பட்டம் குறித்த அவதூறுகளுக்கு மேடையேறி பதிலளிப்பேன் : நாமல் பகிரங்கம்

0

தனது தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட செய்திகளை முற்றிலும் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியளார்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர், அனைத்து அவதூறுகள் தொடர்பிலும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் உரையாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் 

தன் மீதான் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே தனது பட்டம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த அரசாங்கம் பதவியேற்ற சில வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு பி-அறிக்கையை சமர்ப்பித்து எனது பட்டப்படிப்பை விசாரிக்க ஒப்புதல் பெற்றது.

பல மாதங்களாக விசாரணைகள் நடந்து வருகின்றன ஆனால் எந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.  

தவறான கூற்று

இதுபோன்ற போதிலும் தவறான கூற்றுகள் ஒன்லைனில் தொடர்ந்து பரவி வருகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நுகேகொடை பேரணியில் உண்மை வெளிப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வுக்கு முன்னதாக அரசியல் எதிரிகள் தன்னை இழிவுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த அவதூறுகள் மற்றும் அவமானங்கள் அனைத்திற்கும் பேரணியில் பதில் கிடைக்கும் என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version