Home இலங்கை அரசியல் என்.பி.பிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாமல்

என்.பி.பிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாமல்

0

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உலுவடுகே சந்தமாலி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பு
மாநகர சபை முன்பாக இன்றையதினம்(18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துக்கொண்டார்.

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உலுவடுகே சந்தமாலி நேற்றுமுன்தினம்(16)
இரவு கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானார்.

இதன்போது தான் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

புதிய தவிசாளர் தேர்வு

கொழும்பு மாநகர சபையின் புதிய தவிசாளர் தேர்வு தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கப்படுவதைக் கேள்விப்பட்ட அந்த இடத்திறகு வருகை தந்த அவரின் கணவரும் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.         

NO COMMENTS

Exit mobile version