Home இலங்கை குற்றம் சிஐடியில் இருந்து வெளியேறிய நாமல் ராஜபக்ச

சிஐடியில் இருந்து வெளியேறிய நாமல் ராஜபக்ச

0

புதிய இணைப்பு

இன்றையதினம் (7) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சற்று முன்னர்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் சமீபத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இந்தநிலையில்,  தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம்

அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது எனவும் நாமல் கூறியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கடந்த (3) ஆம் திகதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version