Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு வெறும் கண்காட்சி மட்டுமே! ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு வெறும் கண்காட்சி மட்டுமே! ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்

0

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊழல் எதிர்ப்புக் கோஷம் வெறும் கண்காட்சி மாத்திரமே என்று ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் சட்டத்துறை பிரிவு உபசெயலாளர் சட்டத்தரணி தாரக நாணயக்கார, மேற்குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

விமர்சனம்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் பசளை டெண்டர் மோசடியுடன் தொடர்புடைய ஒருவருக்கு இந்த அரசாங்கத்தில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழு விசாரணையொன்றைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் குறித்த அமைச்சர் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

ஆனால் அரசாங்கம் அதனை நாட்டு மக்களிடம் மறைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பு என்றொரு கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version