நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பல சர்ச்சைகளை எதிர்கொண்டு இன்று உச்ச நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா, ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது.

சேலையிலும் கவர்ச்சி.. நடிகை சாந்தினி சேலையில் அழகிய போட்டோஷூட்
50 வினாடிக்கு 5 கோடி
மேலும், தென்னிந்திய சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 50 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

