நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது.
ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது. நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது.
‘சூர்யா 46’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. வெறித்தனமான அப்டேட்
இத்தனை லட்சமா?
இந்நிலையில், நயன்தாரா குறித்து பிரபல பத்திரிகையாளர் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு அவருடன் பவுன்சர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் வரை செலவு ஆகிறது.
அதையும் தயாரிப்பு நிறுவனம் தான் கொடுக்க வேண்டும். அப்படி செலவு செய்தாலும் நயன்தாரா நடிக்கும் படங்கள் எதுவும் பெரிதாக லாபத்தை கொடுப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
