நடிகை நயன்தாரா கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகை அவர் தான்.
பொதுவாக எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லாத நடிகை நயன்தாரா சமீபத்தில் விஷ்ணு வரதனின் நேசிப்பாயா பட விழாவுக்கு சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் சேலையில் அழகாக சென்று இருந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருந்தது.
அடுத்த படம்
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தினை இயக்கி இருந்த நித்திலன் உடன் தான் நயன்தாரா கூட்டணி சேர்கிறாராம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/nayanthara-next-with-maharaja-director-nithilan-1719853436
