Home சினிமா போயஸ் கார்டன் வீட்டில் நடிகை நயன்தாரா எடுத்த புகைப்படங்கள்.. இதோ பாருங்க

போயஸ் கார்டன் வீட்டில் நடிகை நயன்தாரா எடுத்த புகைப்படங்கள்.. இதோ பாருங்க

0

நயன்தாரா 

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா தற்போது இந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக மாறியுள்ளார்.

ஜவான் திரைப்படத்திற்கு பின் இந்தியளவில் தனி இடத்தை பிடித்துள்ளார். இதன்பின் பாலிவுட் பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா கைவசம் தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட், டாக்சிக், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன.

நயன்தாரா வீடு

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார். இந்த நிலையில், தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

Source: https://cineulagam.com/article/nayanthara-poes-garden-house-photo-1719743444

NO COMMENTS

Exit mobile version