Home சினிமா சினிமாவில் இருந்து விலகியது ஏன், அந்த நபர்.. ஓபனாக கூறிய நயன்தாரா

சினிமாவில் இருந்து விலகியது ஏன், அந்த நபர்.. ஓபனாக கூறிய நயன்தாரா

0

நயன்தாரா

நடிகை நயன்தாரா, இன்று அவர் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்த ஸ்பெஷல் தினத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி இவர்களது திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது.

இதில் முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நயன்தாரா பேட்டி

Nayanthara: Beyond The Fairytale என்ற பெயரில் அவரது காதல் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா, தான் இடையில் சினிமாவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும் போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிபட்டடி சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

ஆனால் நான் திரைத்துறையில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அந்த நபர் (திருமஒம் செய்ய விருந்தவர்) என்னை சினிமாவில் விலக சொன்னது தான். எனக்கு அதில் விருப்பமில்லை, எனக்கு ஒரு ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை.

ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என அந்த நபர் சொல்லிவிட்டார், எனக்கு வேறு வழியே இல்லை.

வாழ்க்கையை புரிந்துகொள்ள அப்போது எனக்கு முதிர்ச்சி இல்லை, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள நாம் ஒரு வேதனையான சூழலில் இருக்க வேண்டும், அப்போது வாழ்க்கை புரியும் என பல விஷயங்களை பேசியுள்ளார்.  

Source: https://cineulagam.com/article/nayanthara-reveals-why-she-left-cinema-1731912900

NO COMMENTS

Exit mobile version