Home உலகம் கனடாவில் குழந்தைகளுக்கு சொக்லேட் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவில் குழந்தைகளுக்கு சொக்லேட் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

கனடாவில் (Canada) குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட சொக்லேட்டில் ஊசிகள் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஒரு சிறிய சொக்லேட்டில் ஒரு ஊசி குத்தியிருப்பது போன்ற புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ், கொலம்பியா மாகாணத்தின் மேலும் இரண்டு நகரங்களில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த சொக்லேட்டில் தையல் ஊசிகள் இருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முனையிலிருந்து ஒரு தையல் ஊசி

தங்கள் குழந்தை ” சொக்லேட்டை திறந்த போது, ​​ஒரு முனையிலிருந்து ஒரு தையல் ஊசி நீண்டு கொண்டிருப்பதைக் கண்டதாக பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கம்லூப்ஸ் (Kamloops) மற்றும் ராஸ்லேண்ட் (Rossland) நகரங்களில் சமீபத்தில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆறு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாட்டை பதிவு செய்ய கோரிக்கை

குறித்த சொக்லேட்டில் தவறுதலாக தையல் பொருட்களுடன் கலந்து போயிருக்கலாம் என்றும், அதில் நூல் (thread) இணைந்திருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 250-828-3000 என்ற எண்ணை அழைத்து முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version