தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை இலங்கையில் இருந்த மிக மோசமான அரசாங்கம் என்றும் இந்த அரசாங்கம் இலங்கையின் நவீன நிர்வாக வரலாற்றில் மிக மோசமான அரசாங்கம் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி,குற்றம் சாட்டுகிறார்.
நேபாளத்தில் சமீபத்திய இளைஞர் எழுச்சி அந்த நாட்டில் ஒரு இடதுசாரி அரசாங்கம் இருக்கும்போது நடந்தது என்றும், இலங்கையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அவ்வாறான ஒரு எழுச்சி நடந்தால் அதை தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்
அவ்வாறு ஒரு எழுச்சி ஏற்படுவது வேண்டாமா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளியை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/neRczT2Laqo?start=10
