Home இலங்கை குற்றம் இஷாரா செவ்வந்தி கைது விவகாரம் : நேபாள ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

இஷாரா செவ்வந்தி கைது விவகாரம் : நேபாள ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

0

 ‘கணேமுல்லை சஞ்சீவ’ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேபாள பாதுகாப்புப் படையினரும், இன்டர்போலும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை தூதரகமும் இதற்கு ஆதரவளித்ததாக அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் இலங்கை தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசேட விசாரணை

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நேபாளத்தில் அழைத்துவரப்பட்ட 6 பேரில், இஷாரா செவ்வந்தி (26), டம்மி இஷாரா என அறியப்படும் தக்ஷி நந்தகுமார் (23), ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை (35), ஜப்னா சுரேஷ் எனப்படும் ஜீவதாசன் கனகராசா ஆகியோரிடம் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

NO COMMENTS

Exit mobile version