நேபாளத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கி ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
“இந்த வேலையை நான் விரும்பவில்லை. தெருக்களில் இருந்து வந்த குரல்கள் காரணமாக நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது,” என்று சுஷிலா கார்க்கி பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில் கூறினார்.
புதிய அரசாங்கத்திடம் அதிகாரம் ஒப்படைப்பு
அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நேபாள அரசாங்கத்தை அகற்றிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் அவர் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

