Home இலங்கை சமூகம் ரஜரட்டைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்

ரஜரட்டைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்

0

இலங்கை ரஜரட்டைப் பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் புதியவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அநுராதபுரம் ருவன்வெலிசாயவின் விகாராதிபதி ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரர் இதுவரை காலமும் செயற்பட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய செயற்பாட்டாளர் 

இவருக்கான நியமனம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் புதிதாக கல்லேல்லே சுமணசிறி தேரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க இதற்கான நியமனக்கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.

சுமணசிறி தேரர் கடந்த சில வருடங்களாக தேசிய மக்கள் சக்தியின் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டிருந்தார்.  

NO COMMENTS

Exit mobile version