Home இலங்கை அரசியல் மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் விசேட கூட்டம் நேற்று(09.05.2025) நடைபெற்ற நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தலைமையில் இந்த விசேட கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version