முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் தம்மிக்க குமார

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் உரிய நியமனக் கடிதத்தைப் பெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை(07.10.2024) பதவியேற்க உள்ளார்.

இதேவேளை, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பணிப்பாளராக தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாலேயை பதவி நீக்கம்

இலங்கையின் வரலாற்றில் பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான கடந்த, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், சாலேயை பதவி நீக்கம் செய்வதற்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் சாலே பதவி விலகியுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் தம்மிக்க குமார | New Director Of State Intelligence Service

இருப்பினும், சாலே தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் (CSR) அண்மையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன், இந்த வார தொடக்கத்தில் முறையாக  சாலேயை பதவி நீக்கம் செய்யுமாறு கோரியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்