தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் துயரங்களைக் குறைக்கும் ஒரு பரீட்சை 2028 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நிபுணர் குழு நியமனம்
புலமைப்பரிசில் பரீட்சைகள் மூலம் மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமிக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலைகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு காரணமாக புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டித் பரீ்டசை மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையேயான தரத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.