Home விளையாட்டு விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

0

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 377-வது இன்னிங்ஸில் 15,000 ஓட்டங்களை எட்டியதே அதிவேக சாதனையாக இருந்தது.

அபார வெற்றி

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 41.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினர். விராட் கோலி 139* ரன்கள் (88 பந்துகள்) மற்றும் ஷுப்மன் கில் 110 ரன்கள் (108 பந்துகள்) எடுத்தனர்.

சாதனை

போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்த வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/new-milestone-virat-kohli-sets-new-world-record-1790566843

NO COMMENTS

Exit mobile version