Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

விவசாயிகளுக்கு சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

0

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

நெல் பயிர்செய்கை 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நெல் பயிர்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக அவதானம் செலுத்தி, நெல் விவசாயியைப் பாதுகாப்பதற்குத் திட்டவட்டமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்..

எவ்வாறாயினும், ஏனைய பயிர்கள் தொடர்பில் நாட்டில் இதுவரை திட்டவட்டமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படவில்லை.

நெல் விவசாயிகளைப் போலவே அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

விவசாயிகளின் பிரச்சினை

விவசாயி, அரச அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆகியோர் இனியும் பிளவுபட்டு செயற்படாமல், இனிவரும் காலங்களில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஒரே குழுவாகச் செயற்பட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதியை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நெல் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்தும், நெல் கொள்முதல் விலைப் பொறிமுறையை முறைப்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version