Home இலங்கை சமூகம் அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள விதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள விதி

0

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று (01) முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன (Manjula Kularatne) தெரிவித்துள்ளார். 

பிமல் ரத்நாயக்க விளக்கம்

எனினும் ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று (31) வெளியிடப்பட்டது.

“சுத்தமான இலங்கை” திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த முயற்சி செயற்படுத்தப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அண்மையில் விளக்கினார்.

முன்னர் சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப்பட்டிகளின் விலை தற்போது 5,000 ரூபா முதல் 7,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த விலை உயர்வை நுகர்வோர் விவகார ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version