Home இலங்கை சமூகம் விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்

இதன்மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நெல் பயிருக்கு எண் 01 உம், மிளகாய் பயிருக்கு எண் 02 உம் , சோளப் பயிருக்கு எண் 03 உம், பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம், உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம், புடலங்காய் பயிருக்கு எண் 06 உம், கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம் இட முடியும் என்பதுடன் தக்காளி பயிருக்கு எண் 08 உம், பப்பாளி பயிருக்கு எண் 09 உம், வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


NO COMMENTS

Exit mobile version