Home இலங்கை சமூகம் சிங்கள, தமிழ் புத்தாண்டு நாள் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு

சிங்கள, தமிழ் புத்தாண்டு நாள் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு

0

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board) தெரிவித்துள்ளது.

இதன்படி, சேவைக்காக 500 பேருந்துகள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக சேவை

அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version