Home உலகம் வெளிநாடொன்றில் துயரம் : பேருந்து விபத்தில் பெருமளவு விளையாட்டு வீரர்கள் பலி

வெளிநாடொன்றில் துயரம் : பேருந்து விபத்தில் பெருமளவு விளையாட்டு வீரர்கள் பலி

0

 விளையாட்டு வீரர்களை ஏற்றிவந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 21 ர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரிய நாட்டின் பிரதான நெடுஞ்சாலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியவேளை துயரம் 

ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு தடகள வீரர்கள் வடக்கே உள்ள கானோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் 21 தடகள வீரர்கள் பலியானார்கள்.

சாரதியின் சோர்வு அல்லது அதிக வேகம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version