Home இலங்கை குற்றம் வட்ஸ்அப் எண்களை பயன்படுத்தி பெரும் மோசடி – சிக்கிய தம்பதியினர்

வட்ஸ்அப் எண்களை பயன்படுத்தி பெரும் மோசடி – சிக்கிய தம்பதியினர்

0

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் நண்பர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தி, ரூ.300,000க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணமான தம்பதியினரே நேற்று (19) குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் மற்றவர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி நைஜீரிய நாட்டவருக்கு விற்றதாக கூறப்படுகின்றது.

வட்ஸ்அப் கணக்குகள் ஹேக்

மேலும் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டவர் மீது முன்னர் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.

நைஜீரிய நாட்டவரைக் கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட கொழும்பு தலைமை நீதிபதி, சந்தேகநபரை தலா ரூ.500,000 பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version