Home விளையாட்டு அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய வீரர்

அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய வீரர்

0

இந்திய(india), அவுஸ்திரேலிய(australia) அணிகள் மோதும் போடர் கவாஸ்கர் கிண்ண நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் கைவிட்டபோதிலும் எட்டாவது வீரராக களமிறங்கி அவுஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய அணியின் சகலதுறை வீரர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு(Nithis Kumar Reddy) வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மெல்போனில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 474 ஓட்டங்களை குவித்தது.

ஆனால் தனது முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 164 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இக்கட்டான நேரத்தில் முதல் சதம்

இதனையடுத்து வோஷிங்டன் சுந்தருடன் இணைந்தார் நிதீஷ் ரெட்டி.அற்புதமாக விளையாடிய வோசிங்டன் சுந்தர் அரைசதமடித்து வெளியேற, தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

ஜாம்பவான் சச்சின் பாராட்டு

இதேவேளை பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நினைவில் நிற்கக் கூடிய சதத்தினை நிதீஷ் ரெட்டி விளாசியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிகவும் முக்கியமான தருணத்தில் இந்த தொடரின் மிக முக்கியமான இனிங்ஸை அவர் இன்று விளையாடியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வோஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். நன்றாக விளையாடினீர்கள் எனப் பதிவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version