எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.
புதிய எரிபொருள் விலைகள் நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தம்
அதன்படி, ஓட்டோ டீசலின் விலை லீற்றருக்கு 6 ரூபா குறைந்து 283 ரூபா ஆகவும், சூப்பர் டீசல் லீற்றருக்கு 12 ரூபா குறைந்து 313 ரூபா ஆக விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் 92 ஒக்டேன் விலையும் 6 ரூபா குறைந்து லீற்றருக்கு 299 ரூபா என திருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெட்ரோல் 95 ஒக்டேன் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் மாறாமல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
