முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகக் கூறவில்லை: டயனா கமகே

ஜனாதிபதி தலைமையில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பெயரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை கூறியுள்ளார்.

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

சட்ட நடவடிக்கைகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது. பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது.

இதற்கு மத தலைவர்கள், சிவில் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகக் கூறவில்லை: டயனா கமகே | No Mention Cabinet Approval Cannabis Export Diana

கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவே குறிப்பிட்டேன்.

இந்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சமர்ப்பித்துள்ளார். கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்குப் பயன் கிடைக்கும், ஏற்றுமதி செய்யாவிட்டால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்

பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்

காலம் காலமாக வெறும் விமர்சனங்களையும், பழைய கதைகளையும் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்