கொழும்பு (Colombo), புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 1,000 கிலோ கிராம் பருப்பு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பெருந்தொகை பருப்பானது இன்று (13) கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளுக்குக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பருப்பு தொகை
கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பருப்பு தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பருப்பு தொகையானது ஏனைய விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகத் தயாராக இருந்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.