யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் கதவடைப்பு வெற்றியளித்துள்ளது என தமிழரசு
கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர்
சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(18) ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து கதவடைப்புக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் கதவடைப்புக்கு ஆதரவு
கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள்
திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
