Home உலகம் உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம்

உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம்

0

அணு திறனுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வடகொரியா, மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் நீண்ட காலமாகவே வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை

இதன்படி, தமக்கு எதிரியான தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை எச்சரிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது.

Image Credit: CNBC TV18

தங்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா முன்பே எச்சரித்திருந்தது.இவ்வருடம் இதற்கு முன்பும் பல முறை ஏவுகணை சோதனைகள் நடைபெற்றுள்ளன.

மீண்டும் பதற்றம்

சமீபத்திய சோதனையில், வடகொரியாவின் வடமேற்கு பகுதியில், சீன எல்லை அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

Image Credit: The Jerusalem Post

சுமார் 700 கிலோமீற்றர் தூரம் பறந்த அந்த ஏவுகணை, தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பரப்பின் அருகே கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

NO COMMENTS

Exit mobile version