Home உலகம் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் : சிக்கலில் உக்ரைன்

ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் : சிக்கலில் உக்ரைன்

0

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை ரஷ்ய இராணுவம் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது நடைபெற்று வருகின்றது.

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை

இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தப் போரில் ரஷ்யா படைகளுடன் இணைந்து வடகொரியா மற்றும் சீனாவின் வீரர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து வடகொரிய வீரர்கள் சண்டையிட்டதாக ரஷ்ய ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி கெராசிமோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைனின் படையெடுப்பை முறியடிக்க ரஷ்ய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று வடகொரிய வீரர்கள் சண்டையிட்டனர் என உறுதி செய்த வலேரி கொராசிமோவ், வடகொரிய வீரர்கள் போரில் திறன்பட செயல்பட்டதாகப் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version