Home இலங்கை சமூகம் வடக்கு – கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம் அநுரவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

வடக்கு – கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம் அநுரவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

0

Courtesy: H A Roshan

தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க வாக்குறுகளை அள்ளி வழங்கியதை போன்று காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு வடக்கு – கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம். ஐ.எம்.புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பல துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள்.

உடன் நடவடிக்கை 

பெரும் பொருளாதார கஷ்டம் ஈஸ்டர் தாக்குதல், டெங்கு, கோவிட் என பல சவால்களுக்கு முகங்கொடுத்து உள்வாரி, வெளிவாரி பட்டங்களை சுமார் 4, 5 வருட கற்கைகளை சிறப்பு பொது பட்டம் என கற்று பூரணமாக்கியதன் பின்பும் தீர்வில்லாமல் தவிக்கிறோம்.

எங்களை போன்ற இளைஞர், யுவதிகளின், குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளின் வாக்குகளை வைத்து ஆட்சியை பிடித்த அரசாங்கம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தீர்வை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்காக 30,000 வெற்றிடங்கள் கிராம சேவகர்களுக்காக 3000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனை பட்டதாரிகளுக்கு பரீட்சை இன்றி பொது நியமனங்கள் ஊடாக அரச துறையில் நியமனங்களை வழங்க வேண்டும். 

பல்வேறு பொருளாதார கஷ்டங்களுடன் திருமணம் முடித்த நிலையில் வாழும் எங்களை நிராகரிக்காது கற்ற கல்விக்கான பட்டத்துக்கு தீர்வை தாருங்கள். போட்டி பரீட்சை என்ற பேரில் பரீட்சைக்கு முகங்கொடுக்க முடியாத கேள்விகளை எடுத்து தோல்வியை சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

தற்போது கற்கும் உயர்தரம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு முதல் உள்வாரி -வெளிவாரி பட்டங்களுடன் பலர் பட்டதாரிகளாக தொழில் இன்றி அலைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு புதிய அரசாங்கத்தின் கீழ் பொதுவான நியமனங்களை எங்களுக்கு வழங்க ஆளுநர்கள், துறைசார் அமைச்சுக்கள், புதிய ஜனாதிபதி போன்றோர் மிக கரிசனையுடன் செயற்படுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version