முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! டக்ளஸ் தெரிவிப்பு

 வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று( 31)தலைமை உரையினை ஆற்றும் போதே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி
கிடைத்துள்ளது எனவும் அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

மேலதிக நிதி 

மேலும் மாவட்டத்துக்கு கிடைத்த இந்த நிதி போதுமானதாக அல்லாத போதிலும் வடமாகாண சபை நிதியும் பெரும் தொகையில் உள்ளதாக தெரிவித்தார்.

கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! டக்ளஸ் தெரிவிப்பு | Northern In The Maritime Industry Douglas 500 Mil

அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாக நிதிகள் ஒதுக்கப்படும்.மேலதிகமாக நிதி வழங்க அரசஅதிபர்  இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 500 மில்லியன் ஒதுக்கீடு

மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் ரூபாய் நிதியை
அமைச்சு ஊடாக அரசஅதிபர்  வழங்கியுள்ளார். அந்த நிதி கடல் தொழில்
அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என கூறினார்.

கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! டக்ளஸ் தெரிவிப்பு | Northern In The Maritime Industry Douglas 500 Mil

 எனவே, இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

76 ஆவது சுதந்திர தின நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து மன்னாரில் கலந்துரையாடல்

76 ஆவது சுதந்திர தின நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து மன்னாரில் கலந்துரையாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்