Home இலங்கை சமூகம் வடமாகாண தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாடு: பிரதம விருந்தினராக ரணில்

வடமாகாண தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாடு: பிரதம விருந்தினராக ரணில்

0

வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றும்
மாநாட்டில் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் என
ஐக்கிய தேசியக் கட்சியின் தொழில் நிபுணர் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ராஜாராம் புருஷோத்தமன் குரு தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முதலாவது மாநாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வல்லுனர்களுக்கான முதலாவது
மாநாடாகக் கருதுகிறோம்.

யாழ். வலம்புரி நட்சத்திர விடுதியில் சனிக்கிழமை(14) காலை 10.30 மணிக்கு இடம்பெற உள்ள நிகழ்வில், தற்போதைய ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்கள் மற்றும்
அவிப்பிராயங்களை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொள்ள முடியும்” என அவர்
தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version