Home இலங்கை பொருளாதாரம் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வசதி எல்லோருக்கும் இல்லை! லக்மாலி எம்.பி

வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வசதி எல்லோருக்கும் இல்லை! லக்மாலி எம்.பி

0

வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி இலங்கையில் எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர (Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (19) தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பு

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்படும் வகையில் வரிகள் விதிக்கப்பட்ட பின்னரே வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எல்லாக் குடும்பங்களும் வாகனங்கள் கொள்வனவு செய்வதுமில்லை. அதற்கான பொருளாதார சக்தி அனைவருக்கும் இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version